தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம் என்றும், அவற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.