மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்; அமைச்சர் பங்கேற்பு

2பார்த்தது
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்; அமைச்சர் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசின் உதவி பெறும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயிலும் மாணவ–மாணவியர்களுக்கான 2025ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று (22.11.2025) திருச்செந்தூரில் உள்ள காமராஜ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் அவர்கள் இந்த விழாவை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள பராமரிப்பு இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி