தூத்துக்குடி மாவட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.12.2025) பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான இலவச மிதிவண்டிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் தலைமையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி, அரசு திட்டங்களின் பயன்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்றடைவதாகவும், கல்விப் பயணத்தை எளிதாக்கும் என்றும் கூறினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. செந்தில்வேல் முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி சங்கீதா சின்னராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.