வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் இதில் அடங்கும். விளாத்திகுளம் தொகுதியில் பாலாஜி, தூத்துக்குடி தொகுதியில் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், திருச்செந்தூர் தொகுதியில் ஒபிலியா, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகசுந்தரம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுசியா, கோவில்பட்டி தொகுதியில் பாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.