சென்சார் போர்ட் வைத்து மத்திய அரசு மிரட்டுவதாக நெல்லைமுபாரக்

0பார்த்தது
தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனநாயகம் திரைப்படத்தை வெளியிட சென்சார் போர்ட் மறுப்பதாகவும், இதனை மத்திய அரசு தணிக்கை துறை மூலம் அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எந்த கருத்தையும் முடக்க நினைத்தாலும் மக்கள் மனதில் இருந்து அதை முடக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், பொட்டாலுரணி கிராமத்தில் மீன் பதப்படுத்தும் ஆலையை அப்புறப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 600 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உடனடியாக ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி