தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி நியமனம்

2பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி நியமனம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என். சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி. மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த மாற்றம் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.