இயக்குநர் ஆர் ஜே பாலாஜி, தூத்துக்குடியில் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் நடிகர்
விஜய் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்தார். 'கருப்பு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று வருவதாகவும், இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும்,
சூர்யா போன்ற திறமையான நடிகர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,
விஜய் தற்போது பெரிய பொறுப்பில் இருந்து மக்களுக்கு நல்ல சேவை செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.