தூத்துக்குடி சோனக்கண்விளை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மரியா அந்தோணி ஆக்னல் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று திருச்செந்தூர் அருகே குரும்பூர் பகுதியில் அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்ற அவரை ஆய்வாளர் ராஜ பிரபு துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.