தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10:30 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அஜெண்டாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 12 மணி வரை கூட்டம் துவங்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் கால தாமதமாகத் துவங்கியது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தி
முக கவுன்சிலர்கள் யாரும் வராத நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெகு நேரமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இதேபோன்று மாநகராட்சி அதிகாரிகளும் வேறு பணிகளைப் பார்க்க முடியாமல் சுமார் ஒன்றரை மணி நேரமாக மாநகராட்சி கூட்ட அரங்கிலேயே காத்திருந்தனர். இதன் காரணமாக மக்கள் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.