தூத்துக்குடியில் கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மேலும் 4பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். காரை சித்தேஸ்வரன் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று மதியம் சுவாமி தரிசனம் செய்த பின்னர் மதுரைக்கு சென்றனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் செல்லும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த பக்கபாப்பா மகன் கும்பா தனபால் (41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 4பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.