ஆன்லைன் பண மோசடி எஸ் பி எச்சரிக்கை

0பார்த்தது
ஆன்லைன் பண மோசடி எஸ் பி எச்சரிக்கை
இணைய மேட்ரிமோனி தளங்கள் மூலம் திருமண வரன் தேடுபவர்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடிகள் அதிகரித்து வருவதாக எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். மோசடியாளர்கள் போலி சுயவிபரங்கள் உருவாக்கி, மருத்துவ செலவு, வெளிநாட்டு வேலை, முதலீடு போன்ற காரணங்களை கூறி பணம் பெற்று தலைமறைவாகி விடுகின்றனர். இதனை தவிர்க்க சுயவிபரங்களை சரிபார்த்து, நேரில் சந்தித்து உறுதி செய்த பிறகே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். சந்தேகமோ மோசடியோ ஏற்பட்டால் 1930 என்ற சைபர் உதவி எண் அல்லது இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி