தூத்துக்குடியில், தவெக-
காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர்
காங்கிரஸ் கட்சியின் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முன்னாள் மாநகர் தலைவர் சி. எஸ். முரளிதரன்,
காங்கிரஸ் தலைமை சந்தர்ப்பவாத அரசியலில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி,
திமுக வெற்றிக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வு
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.