அரசு மருத்துவமனையில் மழை நீரால் நோயாளிகள் கடும் அவதி

6பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி உள்ளிட்ட பல வார்டுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருவோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடந்தாலும், தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி