தூத்துக்குடி: அதிமுக ஆட்சியில் மக்கள் அவதி; மேயர் ஜெகன் பொியசாமி

66பார்த்தது
தூத்துக்குடி: அதிமுக ஆட்சியில் மக்கள் அவதி; மேயர் ஜெகன் பொியசாமி
தூத்துக்குடியில், கடந்த அதிமுக ஆட்சியில் 45 நாட்கள் மழைநீரில் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் அந்த நிலை இல்லை என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது கடந்த 3 ஆண்டுகாலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லா பள்ளிச் செல்லும் சாலை, மற்ற சாலைகள், பொதுமக்கள் செல்லும் சின்னச் சின்ன சந்துகள், மேற்குப் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினை, மழைநீர் தேங்கும் சாலைகள், தெருவிளக்கு வசதிகள், மற்றும் 60 வார்டு பகுதியில் உள்ள சாலை வசதி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. 

விடுபட்ட பகுதியிலும் சரிசெய்து விரைவில் கொடுப்போம், கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் இப்போது மழைநீர் தேங்காத வண்ணம் சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையிலும் மழைநீர் நிறைய இடங்களில் தேங்கவில்லை. அதற்குத் தகுந்தாற்போல் வேலைகள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி தற்போது மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 14வது வார்டு குறுங்காடு பகுதியில் பூங்கா விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும். மேற்கு மண்டலத்தில் நிறைய காலிஇடம் உள்ளது. ஒரு சிறிய குழந்தை தவறி விழுந்தது. அதிமுக ஆட்சியில் 2020 பெய்த மழையில் 45 நாட்கள் தண்ணீரில் இருந்தார்கள், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வடிகால் வசதி செய்துக் கொடுத்துள்ளோம்.

தொடர்புடைய செய்தி