தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல்பாசி பிளாஸ்டிக் பொருட்கள் என குப்பைகள் குவிந்தது உள்ளன. இதை தொடர்ந்து, மேரா யுவா பாரத், மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழுவினர் ஆகிய அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.