பசு உயிரை காப்பாற்றிய போலீசார் குவியும் பாராட்டுக்கள்!

0பார்த்தது
தூத்துக்குடி மீளவிட்டான் யார்டில் இருந்து வந்த ரயில் இன்ஜின் நேற்று மாலை 4:20 மணியளவில் தூத்துக்குடி ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது, மூடப்பட்ட இரண்டாம் கேட் தண்டவாளத்தின் நடுவில் பசுமாடும் அதன் கன்றும் நின்றிருந்தன. இதனால் ரயில் இன்ஜின் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மாடு நகரமால் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மாடு மற்றும் கன்றை ஓரமாக அப்புறப்படுத்திய பின் ரயில் இன்ஜின் கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி