தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின் தடை

735பார்த்தது
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின் தடை
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/22 கே. வி நகர் துணை மின் நிலையத்தில் நாளை, பிப்ரவரி 7, 2026 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன்கோவில் தெரு, வ. உ. சி. ரோடு, மீனாட்சிபுரம், வி. இ. ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.