ஜார்ஜ் ரோட்டை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

1பார்த்தது
ஜார்ஜ் ரோட்டை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக சேதமடைந்து வரும் ஜார்ஜ் ரோடு - சிவந்தாகுளம் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முறையான திட்டமிடல் இன்றி சாலைகள் அமைக்கப்பட்டதே சேதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சாலையில் மாதா கோயில், தீயணைப்பு நிலையம், பள்ளிகள், அம்மா உணவகம், மயானம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.