தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் 47 ஆண்டுகளாக மூன்று தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரிபார்த்து அரசு நிலம் என உறுதி செய்தார். பின்னர், சுவர் ஏறிக் குதித்து ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீனாட்சிபுரம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை எளிதில் அடைய புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.