தூத்துக்குடி மாநகரில் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றக் கோரி, பள்ளி கமிட்டி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.