தூத்துக்குடி விவிடி சிக்னல் உள்ளிட்ட பிரதான சாலைகளில் தற்காலிக மேற்கூரை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சந்திப்புகளான எட்டையாபுரம் ரோடு, விவிடி சிக்னல், ஜெயராஜ் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிக்னலில் நிற்கும் பொழுது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக தற்காலிக மேற்கூரை அமைத்துத் தருமாறு வந்த மாநகர மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்தப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் உடன் சென்றனர்.