இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் பீடி இலைகள்; பறிமுதல்

6பார்த்தது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் பீடி இலைகள்; பறிமுதல்
தூத்துக்குடி மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்பிலான 77 பீடி இலை மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் நடைபெற்ற சோதனையின் போது, காவல்துறையை கண்ட கடத்தல் கும்பல் படகில் கடலுக்குள் தப்பி ஓடியது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றி, தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி