கோடை விடுமுறை முடிந்து, நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, தூத்துக்குடி அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.