தூத்துக்குடியில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் கீழ் 102 பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்குகளை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து சேமிப்புப் புத்தகங்களை வழங்கினார். தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக ரூ. 250 செலுத்தி கணக்குகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தில் தற்போது 8.2% வட்டி வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் என்றும், 18 வயதிற்குப் பின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக தொகையைப் பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெண் குழந்தைகள் கல்வி மூலம் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.