தெற்காசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி வரும் நவம்பர் 5 முதல் 9 வரை ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடக்கும் இந்தப் போட்டியில் பல்வேறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பைல்ஸ் பாய், செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் வீரர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.