சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா:

1பார்த்தது
சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா:
தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 6, 2026 அன்று சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, காலை 6.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் 8.24 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். மீன ராசி, மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தேங்காய், கருப்பு வஸ்திரம் கொண்டு வந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

தொடர்புடைய செய்தி