தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கைலாய வாத்தியம் உள்ளிட்ட மேல தாளங்கள் முழங்க தேரில் எழுந்தருளிய பாகம்பிரியாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.