தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாத்திமா நகரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்ந்து, சம்பவத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நினைவாக மணிமண்டபம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.