திருச்செந்தூர் அருகே, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னலை காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் பிடித்தனர். அவரை கைது செய்ய முயன்றபோது, அவர் நாட்டு துப்பாக்கியால் தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு காயமடைந்தார். பின்னர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரிய அந்தோணிக்கு காலில் காயம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.