சிலம்பம் போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி சாம்பியன்

84பார்த்தது
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தூத்துக்குடியில் உலக சிலம்பாட்ட கழகம் மற்றும் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிலம்பம் கழகங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, தொடு முறை, சிலம்புசண்டை, ஆயுதம் தனித்திறன் என என்ன பல பிரிவுகளாக 6 வயது முதல் 25 வயது வரை போட்டிகள் நடத்தப்பட்டது. புள்ளிகள் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக சிலம்ப கலையை கற்றுத் தரும் சிலம்ப ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you