ரேஷன் கைரேகை பிரச்சனைக்கு தீர்வு: 150 பேருக்கு அமைச்சர்

2பார்த்தது
தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு ஆகாததால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு தீர்வு காண அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவின் பேரில் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரில் கலந்துகொண்டு, 150 பேருக்கு மாற்று நபர் மூலம் ரேஷன் பொருட்கள் பெற அனுமதி வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற குறைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன என்றார். பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி