பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி!

0பார்த்தது
பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி!
தூத்துக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர்கள் கன்னியாகுமரி கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச்சாலை பாலத்தில் பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நரேன் குமார் (15) என்ற மாணவர் உயிரிழந்தார். வள்ளியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக சென்ற சுற்றுலா, மாணவனின் உயிரிழப்பால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி