தூத்துக்குடி தென்காசி மாவட்டம் மருதம்புத்துரை சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன், காவல்துறை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவால் காலில் சுடப்பட்டார். தற்போது தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.