தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றிக்காக வைக்கப்பட்டிருந்த வாழ்த்து டிஜிட்டல் பேனரை கிழித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளருமான சுமன் (45) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.