தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சார வாகனத்தில் ஏறி திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றார்.