தூத்துக்குடி: மினி டைடல் பார்க்கை முதல்வர் திறந்து வைத்தார்

66பார்த்தது
தூத்துக்குடி: மினி டைடல் பார்க்கை முதல்வர் திறந்து வைத்தார்
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 32 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட மினி டைட்டில் பார்க்கை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் ஹோட்டலில் இருந்து வரும்போது சாலையில் இருபுறமும் நின்று பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கை அசைத்து வரவேற்பு அளித்தனர். 

அப்போது முதல்வருக்கு பொதுமக்கள் சால்வை வழங்கினர். தொடர்ந்து மினி டைட்டில் பார்க்கை திறந்து வைக்க அந்த முதல்வருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் மினி டைட்டில் பார்க்கை பார்வையிட்டார். அப்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் அவரிடம் டைட்டில் பார்க் சிறப்பு வசதிகள் மற்றும் புதியதாக செயல்பட உள்ள நிறுவனங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கினார்கள். ‌ 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் தொழில்துறை அமைச்சர் ராஜா வரவேற்று பேசினார். தொடர்ந்து புதிய நிறுவனங்களுக்கு ஆணையை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி