வீடு கட்டி கொடுத்த ஒப்பந்தகாரர் ரூ. 2, 58, 745 வழங்க உத்தரவு

71பார்த்தது
வீடு கட்டி கொடுத்த ஒப்பந்தகாரர் ரூ. 2, 58, 745 வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சார்ந்த அருண் செல்லத்துரை என்பவர் தூத்துக்குடி ஆசிரியர்காலனியில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் வீடு; கட்ட ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே பெற்றுக் கொண்ட தொகை தவிர பாக்கித் தொகையான ரூபாய் 1, 98, 745 ஐ பின்னர் பெற்றுக் கொள்ளுமாறு புகார்தாரர் கூறியுள்ளார். அதற்கு ஒப்பந்தகாரர் மீதித்தொகை முழுவதையும் செலுத்தினால் மட்டுமே எஞ்சிய வேலைப்பாடுகளை செய்து கொடுப்பதாக கூறியதன் அடிப்படையில் அந்த பணத்தை ரொக்கமாக செலுத்தியுள்ளார்.

தரமற்ற முறையில் கட்டிடம் கட்டியிருப்பது புகார்தாரருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து அதிகமாக பெற்ற தொகையான ரூபாய் 1, 98, 745 ஐ திருப்பி செலுத்த வேண்டுமென்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 50, 000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 10, 000 ஆக மொத்தம் ரூபாய் 2, 58, 745 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி