தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.