தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த 65 வயது பிரபாகர், வெள்ளிக்கிழமை அன்று 8 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரபாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.