தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில், கணவன் பாலமுருகன் குற்றவாளி என தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முருகன், பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த டி.எஸ்.பி. சுனில், இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், கிங்ஸ்லி தேவ் ஆனந்த், அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், தலைமை காவலர் கணேசன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.