தொழில் நகரமான தூத்துக்குடியில் இரண்டாம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சிவன் கோவில் தேரடி, மேலரவீதி, சிவன் கோயில் தெரு போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள்
போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.