தூத்துக்குடி: பள்ளி முன் பெட்ரோல் குண்டு வீச்சு

0பார்த்தது
தூத்துக்குடி: பள்ளி முன் பெட்ரோல் குண்டு  வீச்சு
தூத்துக்குடி வாகைக்குளத்தில் தனியார் கல்லூரி கருத்தரங்கில் பங்கேற்ற சவலாப்பேரி பள்ளி மாணவர்களை, வல்லநாடு பள்ளி மாணவர்கள் கேலி செய்ததால் தகராறு ஏற்பட்டது. பின்னர் சவலாப்பேரி மாணவர்கள் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த சிலர் சம்பந்தப்பட்ட மாணவர்களை தாக்க முயன்றுள்ளனர். அவர்கள் தப்பியோடியதால் ஆத்திரமடைந்து பள்ளி முன் உள்ள சுவரில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தர் மற்றும் 3 சிறார்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி