தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவல் நிலையம் போன்ற முக்கியப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி உள்ளிட்ட வார்டுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமத்தை எதிர்கொண்டனர். மழைநீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.