இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்

1பார்த்தது
தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயில்வாகனம் தலைமையில் போலீசார் டபுள் யு ஜி சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். செல்போன் பயன்படுத்தியவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றவர்கள் என பலரை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், இளைஞர்களிடம் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது என்றும், அதிவேகமாக செல்வதால் பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி