மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: கோரிக்கை!

313பார்த்தது
மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: கோரிக்கை!
தூத்துக்குடி கீழ ரத வீதியில் புதிதாக அமைக்கப்படும் மின்மாற்றி பொதுமக்கள் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் ஆபத்தாக இருப்பதாக இந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் தேரோட்டம், அருகிலுள்ள ஆலயங்கள் மற்றும் பள்ளிகள் காரணமாக தினமும் மக்கள் மற்றும் மாணவர்கள் அதிகமாகச் செல்லும் பகுதி என்பதால், மின்மாற்றியை மக்கள் நடமாட்டம் குறைந்த மாற்று இடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியத்திடம் மனு அளித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி