தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து, மாநகராட்சி சுகாதார அலுவலர் அவர்கள் நேற்று (22.05.2026) நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தண்ணீர் வசதி மற்றும் சுகாதார நிலையைச் சரிபார்த்த அவர், பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி கழிவறைகளை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்குமாறு அங்கிருந்த ஊழியர்களுக்குக் கடுமையான உத்தரவிட்டார்.