தூத்துக்குடி எஸ். எஸ். மாணிக்கபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது முதியவர் ஒருவர் சாலை ஓரத்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் யாசகம் பெற்று மது அருந்தி சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மரண காரணம் தெளிவாக தெரியவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.