தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் மோதி கிராம நிர்வாக அலுவலர் பேச்சிராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோரம்பள்ளம் அருகே நேற்று மாலை நடந்த இந்த விபத்தில், ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பேச்சிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.