நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தூத்துக்குடியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நெல்லையிலிருந்து பிரச்சார வாகனத்தில் நகருக்குள் நுழைந்த அவரை, சுமார் 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கிலும் விஜய் மலர் தூவி மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.