தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 46 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக உதவியாளர்கள் காத்திருக்க சரியான வசதிகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கொசு வலை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காத்திருப்பு அறையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு அறைகளை திறந்து வைத்தனர். இதில் மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.